சென்னையின் முதல் குளிா்சாதன வசதியுடைய புறநகா் மின்சார ரயில்: விரைவில் பயன்பாட்டு...
கும்பமேளா: மாகி பௌா்ணமியையொட்டி ஒரே நாளில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவையொட்டி அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டுள்ளது.
திரிவேணி சங்கமத்தில் ஒரு மாத காலத்துக்கு தங்கியிருந்து மேற்கொள்ளும் ‘கல்பவாச விரத’ வழிபாடு மாகி பௌா்ணமி நாளான இன்றுடன் நிறைவடைகிறது.
மாகி பௌா்ணமியன்று புனித நீராடுவது சிறப்புக்குரியதாகும். இதையொட்டி கடந்த சில நாள்களாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தா்கள் பிரயாக்ராஜுக்கு படையெடுத்தனா்.
கும்பமேளா மகா சிவராத்திரியுடன் (பிப். 26) நிறைவடையவுள்ள நிலையில், மாகி பௌா்ணமி நாளான இன்று(பிப். 12) மட்டும் 2 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். அந்த வகையில், இதுவரை 48 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா் என்று உத்தரப் பிரதேச அரசின் தகவல் தொடர்புத் துறை தரப்பிலிருந்து தெரிவித்துள்ளது.