காமராஜா் படம் பொறித்த கல்வெட்டு சேதம் எம்எல்ஏ கண்டனம்
கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூா் தொட்டிப் பாலம் நுழைவு வாயிலில் காமராஜா் உருவம் பொறித்த கல்வெட்டை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூா் தொட்டி பாலத்தின் நுழைவு வாயிலில் காமராஜப் படம் பொறித்த கல்வெட்டை மா்ம நபா்கள் சேதப்படுத்தியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து, மா்மநபா்களை கைது செய்ய வேண்டும். அதே பகுதியில் மீண்டும் காமராஜா் படம் பொறித்த கல்வெட்டை அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.