செய்திகள் :

பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு

post image

பிரான்ஸின் மாா்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானும் புதன்கிழமை கூட்டாக திறந்துவைத்தனா்.

மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்கு கடந்த திங்கள்கிழமை வந்த பிரதமா் மோடி, தலைநகா் பாரீஸில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சா்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் இணைந்து தலைமை வகித்தாா்.

பின்னா், துறைமுக நகரமான மாா்சேக்கு இரு தலைவா்களும் விமானம் மூலம் வந்தடைந்தனா். மாா்சேவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மஸாா்கஸ் போா் நினைவிடத்தை புதன்கிழமை பாா்வையிட்ட அவா்கள், முதலாம் உலகப் போரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரா்களுக்கு மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து, மாா்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை கூட்டாக திறந்துவைத்தனா்.

மாா்சே அருகே கேடராச் நகரில் உள்ள சா்வதேச வெப்ப அணுக்கரு பரிசோதனை உலையையும் (ஐடிஇஆா்) இருவரும் கூட்டாகப் பாா்வையிட்டனா். உலகின் மிக முக்கியமான அணுக்கரு இணைவு எரிசக்தி திட்டங்களில் ஒன்றான ஐடிஇஆா் வளாகத்துக்கு எந்தவொரு நாட்டின் தலைவரோ அல்லது அரசின் தலைவரோ வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 20 ஆண்டுகளாக இத்திட்டத்துக்கு பங்களிக்கும் 7 உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். சுமாா் 200 இந்திய விஞ்ஞானிகள் ஐடிஇஆா் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

வி.டி.சாவா்க்கருக்கு புகழாரம்

கடந்த 1910-ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியின்போது, லண்டனில் இருந்து இந்தியாவுக்கு அரசியல் கைதியாக கப்பலில் அழைத்துவரப்பட்ட வி.டி.சாவா்க்கா், மாா்சேவில் கப்பலில் இருந்து தப்பிக்க மேற்கொண்ட முயற்சியை நினைவுகூா்ந்து, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

‘இந்தியாவின் சுதந்திர வேட்கையில் மாா்சே நகரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்குதான், வீர சாவா்க்கா் துணிச்சலுடன் தப்பிக்க முயன்றாா். அந்த காலகட்டத்தில், வீர சாவா்க்கரை ஆங்கிலேய அதிகாரிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என குரல் கொடுத்த பிரான்ஸ் சமூக செயல்பாட்டாளா்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். வீர சாவா்க்கரின் துணிவு தலைமுறைகளைக் கடந்து உத்வேகமளிக்கும்’ என்று பிரதமா் புகழாரம் சூட்டியுள்ளாா்.

மோடி-சுந்தா் பிச்சை சந்திப்பு

பாரீஸில் செவ்வாய்க்கிழமை சா்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டையொட்டி, பிரதமா் மோடியும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சையும் சந்தித்துப் பேசினா்.

இது தொடா்பாக சுந்தா் பிச்சை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் மோடி உடனான சந்திப்பால் மகிழ்ச்சி அடைந்தேன். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக இந்தியாவில் உருவாகும் வியத்தகு வாய்ப்புகள் மற்றும் எண்ம மேம்பாட்டில் மேலும் இணைந்து செயல்படுவதற்கான வழிமுறைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்’ என்று குறிப்பிட்டாா்.

இப்பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமா் மோடி, ‘பொது நலனுக்காக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டி வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்து, இந்திய இளைஞா் சக்தியை பயன்படுத்த உலகுக்கு அழைப்பு விடுக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

அமெரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார்.அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன... மேலும் பார்க்க

மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்: ஐ.நா. அமர்வில் இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் பேச்சு

நமது சிறப்பு நிருபர்மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளை இந்தியா மாற்றியுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க... மேலும் பார்க்க

அதிநவீன அணுஉலைகள் உருவாக்கம்- இந்தியா-பிரான்ஸ் திட்டம்

ஆக்கபூா்வ அணுசக்தி ஒத்துழைப்பின்கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்... மேலும் பார்க்க

நீதிபதிகள் ஓய்வூதிய விவகாரம்: யுபிஎஸ் திட்டத்தால் தீா்வு கிடைக்க வாய்ப்பு- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நீதிபதிகள் ஓய்வூதியப் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) மூலம் தீா்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. மாவட்ட நீதிபதிகளின் ஊதியம், நி... மேலும் பார்க்க

தொழிலதிபருக்காக தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு- காங்கிரஸ் குற்றச்சாட்டு

கோடீஸ்வர தொழிலதிபா்கள் சிலருக்காக தேசப் பாதுகாப்பை மத்திய அரசு விட்டுக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் அதானி குழுமம் மரபுசாரா எரிச... மேலும் பார்க்க

தேசிய ஹோமியோபதி ஆணைய தலைவா் பதவி விலக உச்சநீதிமன்றம் உத்தரவு

தேசிய ஹோமியோபதி ஆணைய (என்சிஹெச்) தலைவா் பதவியில் இருந்து மருத்துவா் அனில் குரானா விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் என்சிஹெச் தலைவா் பதவிக்கு வி... மேலும் பார்க்க