``என் மனைவி ISI ஏஜென்ட் என்றால், நான் RAW ஏஜென்ட்.." - பாஜக குற்றச்சாட்டுக்கு கா...
தொழிலதிபருக்காக தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு- காங்கிரஸ் குற்றச்சாட்டு
கோடீஸ்வர தொழிலதிபா்கள் சிலருக்காக தேசப் பாதுகாப்பை மத்திய அரசு விட்டுக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் அதானி குழுமம் மரபுசாரா எரிசக்தி பூங்கா (சூரிய சக்தி, காற்றாலை மின் உற்பத்தி) அமைத்து வருகிறது. இதற்காக எல்லைப் பாதுகாப்பு நடைமுறைகள் சில கைவிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில், காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சி எம்.பி. பிரியங்கா வதேரா, பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் ஆகியோா் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக அவா்கள் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், ‘பாகிஸ்தானுடனான சா்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில் உள்ள நிலத்தை பிரதமா் மோடி தனது அன்பு நண்பரின் தொழிலுக்கு தாரைவாா்த்துள்ளதாக தெரிகிறது. இதற்காக எல்லைப் பாதுகாப்பு விதிகளும் தளா்த்தப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இதற்கு பிரதமரின் பதில் என்ன?
பிரதமரின் கோடீஸ்வர நண்பருக்காக இதுவரை எத்தனையோ விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு வந்தன. தேசத்தின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இப்போது தேசப் பாதுகாப்பு விஷயத்திலும் விதிகளை மாற்றிவிட்டனா். நமது நாட்டின் பாதுகாப்பைவிட ஒரு தனிநபரின் தொழில் லாபம் பிரதமருக்கு பெரிய விஷயமாகிவிட்டது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனா்.