செய்திகள் :

Ilaiyaraaja: "பவதாரிணியின் கடைசி ஆசை... இது உலகம் முழுதும் பரவும்" - இளையராஜா உருக்கம்!

post image
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி தனது 47வது வயதில் '25.2.2024'ம் தேதி காலமானார்.

அவர் மறைந்து ஓராண்டாகியிருக்கும் நிலையில் பவதாரிணி நினைவாக அவரது பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்திருக்கிறார். நேற்று பிப் 12-ம் தேதி பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் வந்திருந்தனர். பவதாரிணி பாடிய பாடல்கள் கச்சேரி நடத்தப்பட்டது.

இளையராஜா

இவ்விழாவில் பேசியிருக்கும் இளையராஜா, "பவதாரிணி பாப்பாவின் பிறந்த நாள் இன்று. இந்த பிறந்த நாளிலேயே அவரின் 'திதி' நாளாகவும் அமைந்திருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தியடைந்திருக்கிறது என்பதற்கான நல்ல உதாரணம் இது.

'சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழுவை உருவாக்க வேண்டும் என்பது பவதாரிணியின் கடைசி ஆசை. 15 வயதிற்கு மேற்படாதவர்களுக்கு மட்டுமே இந்த ஆர்கெஸ்ட்ரா.

இளையராஜா

உலகின் எந்த மூலையிலிருந்து சிறுமிகள் வந்தாலும் இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவில் சேரலாம். இந்தக் குழுவில் சேர விரும்புவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். இது பவதாரிணியின் நினைவாக உலகம் முழுவதும் பரவும்" என்று பேசியிருக்கிறார்.

Bhavatharini: `யுவன் இசையமைப்பாளராக உருவாக பவதாரிணிதான் காரணம்...' -வெங்கட் பிரபு உருக்கம்!

இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி மறைந்து ஓராண்டாகியிருக்கும் நிலையில், அவரது திதி நாளான நேற்று (பிப் 12) நினைவு நிகழ்வு நடத்தப்பட்டது.பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்ற... மேலும் பார்க்க

Ravi Mohan: `எது பண்ணாலும்..' -ரசிகர்களுக்கு நடிகர் ரவி மோகன் கொடுத்த அட்வைஸ்

காதலிக்க நேரமில்லை படத்தைத் தொடர்ந்து ரவி மோகன் (ஜெயம் ரவி) ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’ ‘பராசக்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் ‘கராத்தே பாபு’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்ற... மேலும் பார்க்க

Rajinikanth : `ஸ்லோ மோஷன் இல்லையென்றால் ரஜினி இருந்திருக்க முடியுமா?' - ராம் கோபால் வர்மா விமர்சனம்

இயக்குநர் ராம் கோபால் வர்மா ரஜினியின் நடிப்பை விமர்சித்துப் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சமீபத்திய பேட்டியில் ரஜினி குறித்து பேசிய இயக்குநர் ராம் கோபால் வர்மா, `` நடிப்பு என்பது ஒர... மேலும் பார்க்க

Bhavatharini: `பவதாரிணி பிறந்தபோது முதன் முதலாகக் கொஞ்சிய அண்ணன் நான்...'-கண்கலங்கிய கார்த்திக் ராஜா

இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி மறைந்து ஓராண்டாகியிருக்கும் நிலையில், அவரது திதி நாளான நேற்று (பிப் 12) நினைவு நிகழ்வு நடத்தப்பட்டது.பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்ற... மேலும் பார்க்க

Rachitha: ``இப்படி இறங்கிட்டாங்களேன்னு பேசறது கொஞ்சம் வருத்தமா இருக்கு" - டான்ஸ் மாஸ்டர் மானஸ்

பிக் பாஸ் காம்பினேஷனில் 'ஃபயர்'பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவரும் 'பிக்பாஸ் அல்டிமேட்'டின்டைட்டில் வின்னருமான பாலாஜி முருகதாஸும், சரவணன் மீனாட்சி தொடரின் வழியே கவனம் ஈர்த்தவரும், பிக் பாஸ்... மேலும் பார்க்க

NEEK: 'என்கூட குழந்தையா நடிச்சவங்க'- அனிகா சுரேந்திரன் குறித்து அருண் விஜய்

‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி இருக்கிறார் தனுஷ்.இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்த... மேலும் பார்க்க