Rajinikanth : `ஸ்லோ மோஷன் இல்லையென்றால் ரஜினி இருந்திருக்க முடியுமா?' - ராம் கோபால் வர்மா விமர்சனம்
இயக்குநர் ராம் கோபால் வர்மா ரஜினியின் நடிப்பை விமர்சித்துப் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய பேட்டியில் ரஜினி குறித்து பேசிய இயக்குநர் ராம் கோபால் வர்மா, `` நடிப்பு என்பது ஒரு கதாபாத்திரத்தை சார்ந்தது. ஆனால், நட்சத்திரங்கள் அவர்களுடைய பெர்பாமென்ஸை சார்ந்து இருக்கிறார்கள். இவை இரண்டுக்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. ரஜினிகாந்த் சிறந்த நடிகரா? எனக்கு தெரியவில்லை. ரஜினியை ஒரு நட்சத்திரமாக பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள். அவரால் `சத்யா' திரைப்படத்தின் பிக்கு ஹாத்ரே கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. ஸ்லோ மோஷன் நடையில்லாமல் ரஜினிகாந்த் இருந்திருக்க முடியுமா என எனக்கு தெரியவில்லை. ரஜினி இப்படி பாதி படத்திற்கு எதுவும் செய்யாமல் நடப்பதை பார்த்து மகிழ்வதில் தவறில்லை. அது உங்களுக்கு ஒரு உயர்வான உணர்வை தருகிறது. ரசிகர்கள் அவரை கடவுளைப் போலவே பார்க்கிறார்கள். ஆதலால் அவரால் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. ஸ்டார் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும். " எனக் கூறியிருக்கிறார்.
மேலும் அமிதாப் பச்சன் பற்றி பேசிய அவர், ``அமிதாப் பச்சன் ஒரு படத்தில் வயிற்று வலி வருவது போல் நடித்திருப்பார், அவர் அந்தக் காட்சியில் நடிப்பதை பார்க்கவே முடியவில்லை. அமிதாப் பச்சன் மற்றும் ரஜினியை கடவுளாக பார்ப்பதால் இப்படியான நட்சத்திரங்களால் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க முடிவதில்லை." எனக் கூறியிருக்கிறார்.