செய்திகள் :

Bhavatharini: `யுவன் இசையமைப்பாளராக உருவாக பவதாரிணிதான் காரணம்...' -வெங்கட் பிரபு உருக்கம்!

post image
இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி மறைந்து ஓராண்டாகியிருக்கும் நிலையில், அவரது திதி நாளான நேற்று (பிப் 12) நினைவு நிகழ்வு நடத்தப்பட்டது.

பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் கலந்துகொண்டிருந்தனர். பவதாரிணி பாடிய பாடல்களின் கச்சேரி நடத்தப்பட்டது.

வெங்கட் பிரபு, பவதாரிணி,

இதில் பேசியிருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, "கடந்த ஜனவரி 1ம் தேதி நான், யுவன், பவதாரணி எல்லோரும் ஒன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது 'G.O.A.T' படத்தில் ஒரு பாடல் பாடனும்னு பவதாரிணி கிட்டச் சொன்னேன்.

ஹாஸ்பிட்டல் போய்ட்டு உடல்நிலை சரியானதும் வந்து பாடுனு சொல்லிருந்தேன். அந்த மாதத்திற்குள்ளேயே தவறிவிட்டாள். பவதாரிணிக்குக் கொடுத்த அந்த வாக்க காப்பாத்தனும்னு யுவன் கிட்ட சொல்லி 'AI' மூலமாக 'சின்ன சின்ன கண்கள்' பாடலை உருவாக்கினோம்.

வெங்கட் பிரபு, பவதாரிணி, யுவன்

யுவனும், பவதாரிணியும்தான் ரொம்ப பாசமாக இருப்பாங்க. யுவன் இசையமைப்பாளராக ஊக்குவித்தது பவதாரிணிதான். யுவனுக்கு குருவே பவதாரிணிதான். யுவனே அதை நிறைய முறை சொல்லியிருக்கான். யுவன் இப்போ இந்தியாவில் இல்லை, அதனால இந்த நிகழ்ச்சிக்கு வர முடியல. யுவனோட நினைவு இங்கதான் இருக்கும்." என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

`எகிப்த்தில் திரையிடப்பட்ட முதல் தமிழ் சினிமா வீரபாண்டிய கட்டபொம்மன்தான்' - பி.ஆர்.பந்தலுவின் மகள்

பி.ஆர்.பந்தலு இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1959-ல் வெளியான படம் 'வீரபாண்டிய கட்டபொம்மன்'. சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட உள்ளது.பெருமைமிக்க கிளாசிக்... மேலும் பார்க்க

Ilaiyaraaja: "முழு ஈடுபாடும் இசையின் மீதே..." - 109 படங்களின் பாடல்கள் உரிமை வழக்கில் இளையராஜா

தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா நேரில் ஆஜராகி ஒரு... மேலும் பார்க்க

Sethuraman: ``உன்னுடன் ஒன்றாக இருந்த அந்த அழகான 4 ஆண்டுகள்..'' -சேதுராமன் குறித்து மனைவி உருக்கம்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘சக்கப் போடு போடு ராஜா’ போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் சேதுராமன். சரும மருத்துவப் படிப்பை முடித்த சேதுராமன் சொந்தமாக மருத்துவமனை வைத்து நடத்தி வந்தார். சமூக வலைதளங்களில் ம... மேலும் பார்க்க

'மனம் கனந்து கிடக்கிறது'- மாரடைப்பால் இறந்த கலை இயக்குநருக்கு இரங்கல் தெரிவித்த வசந்த பாலன் !

‘குட்டி புலி’, ‘ஜெயில்’, ‘அநீதி’, ‘குடும்பஸ்தன்’ போன்ற படங்களில் கலை இயக்குநராகப் பணிப்புரிந்த சுரேஷ் கல்லேரி நேற்று (பிப்ரவரி13) மாரடைப்பால் காலமாகி இருக்கிறார். அவரின் மறைவிற்கு திரைதுறையைச் சேர்ந்த... மேலும் பார்க்க

Dragon: `அந்த பாட்டுல வர்ற மாதிரி என் காதலிகூட 18 நாடுகள் போயிருக்கேன்!' - சீக்ரெட்ஸ் சொல்லும் டீம்!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.`லவ் டுடே' திரைப்படத்திற்குப் பிறகு இளைஞர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன்... மேலும் பார்க்க

Ravi Mohan: `எது பண்ணாலும்..' -ரசிகர்களுக்கு நடிகர் ரவி மோகன் கொடுத்த அட்வைஸ்

காதலிக்க நேரமில்லை படத்தைத் தொடர்ந்து ரவி மோகன் (ஜெயம் ரவி) ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’ ‘பராசக்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் ‘கராத்தே பாபு’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்ற... மேலும் பார்க்க