ஆஸ்திரேலிய வீரர் பந்துவீச்சில் சந்தேகம்! தடைவிதிக்கப்படுமா?
ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ குஹ்னேமன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பந்துவீசுவதற்கு தடைவிதிக்கப்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரின் முதல் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வெல்லுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த மேத்யூ குஹ்னேமன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
இடதுகை சுழற்பந்து வீச்சாளரான மேத்யூ குஹ்னேமன் இந்தத் தொடரில் மொத்தமாக 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளதால், அவரது பந்துவீச்சை சோதனைக்கு உள்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க...ஆர்சிபி புதிய கேப்டன் அறிவிப்பு!
2017 ஆம் ஆண்டு அறிமுகமான மேத்யூ குஹ்னேமன் இதுவரை 124 போட்டிகளில் விளையாடியுள்ளார். 5 டெஸ்ட், 4 ஒருநாள் மற்றும் பிக்பாஸ் தொடரில் 55 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
கிரிக்கெட் விதிகளின் படி, கிரிக்கெட் விதிகளின் படி, மேத்யூ குஹ்னேமன் பந்துவீசும் போது அவரது கை 15 டிகிரி அதிகமாக சுழல்வது சட்டத்திற்கு புறம்பாகப் பார்க்கப்படுகிறது. பந்துவீசும் போது அவரது கை 15 டிகிரி அதிகமாக சுழல்வது சட்டத்திற்கு புறம்பாகப் பார்க்கப்படுகிறது.
பிரிஸ்பேனில் உள்ள சோதனை மையத்தில் மேத்யூ குஹ்னேமன் பந்துவீச்சு சோதனைக்கு உள்படுத்தப்பட்டு பின்னர் ஐசிசிக்கு சமர்பிக்கப்படவுள்ளது. ஒருவேளை அவரது பந்துவீச்சில் சந்தேகம் ஏற்பட்டால், அவரது பந்துவீச்சில் மறுமதிப்பீடு செய்யும் வரை அவர் கிரிக்கெட்டில் இருந்து இடைநீக்கம் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.