`நெருக்கமாகப் பழகுவதுபோல் தோன்றினாலும்...' - துலாம் ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட...
சேஸிங்கில் வரலாற்று சாதனை..! முத்தரப்பு தொடரில் இறுதிப் போட்டிக்கு தேர்வான பாகிஸ்தான்!
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தேர்வானது.
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பிப்.8ஆம் தேதி தொடங்கியது.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் அதிகமாக வெற்றி பெறும் இரண்டு அணிகள் பிப்.14ஆம் தேதி இறுதிப் போட்டியில் விளையாடும் என திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.
தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகளிலும் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியது.
இந்தப் போட்டிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடைசி ஒருநாள் போட்டியில் தெ.ஆ. அணி 352/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிளாசன் 87, பவுமா 82, ப்ரிட்ஸ்கி 83 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 355/4 எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் அதிகபட்ச சேஸிங் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தெ.ஆ. எதிராக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற வரலாற்று சாதனையும் இதன் மூலம் பாகிஸ்தான் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் அதிகபட்சமாக சல்மான் அஹா 134, முகமது ரிஸ்வான் 122 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். சல்மான் அஹா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.