ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!
ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது பெறும் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளார் ஷுப்மன் கில்.
3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக துணை கேப்டன் ஷுப்மன் கில் 112 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 3-0 என இந்திய அணி தொடரை வென்றது.
50 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 2,587 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருதும் ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.
இந்தத் தொடரில் 87, 60, 112 என மூன்று போட்டிகளிலும் சேர்த்து 259 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார் ஷுப்மன் கில்.
இந்தியாவுக்காக அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் சமன் செய்துள்ளார் ஷுப்மன் கில்.
டி20, டெஸ்ட்டில் சொதப்பினாலும் ஷுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடி வருகிறார்.
ஒருநாள் போட்டியில் அதிக முறை தொடர் நாயகன் வென்ற இந்தியர்கள்
1. சச்சின் டெண்டுல்கர் - 15
2. விராட் கோலி - 11
3. யுவராஜ் சிங் - 7
4. சௌரவ் கங்குலி, எம்.எஸ்.தோனி - 6
5.ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் - 5