திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்!
மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்து திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ரமேஷ் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராக தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக க. செல்வராஜும் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இல. பத்மநாபனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: மாநிலங்களவை உறுப்பினர் பதவி: கமல்ஹாசனுடன் உதயநிதி சந்திப்பு!
திமுகவின் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளராக அப்துல் வகாப் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளராக கே,எம். ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.