கோயில் திருவிழாவில் பக்தர்கள் கூடாரத்தை தாக்கிய யானைகள்! 3 பேர் பலி; 36 பேர் காய...
மாநிலங்களவை மார்ச் 10 வரை ஒத்திவைப்பு!
புது தில்லி : மாநிலங்களவை கூட்டத்தொடர் மார்ச் 10-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மக்களவை இன்று(பிப். 13) கூடியதும் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக, அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், மாநிலங்களவையில் பட்ஜெட் குறித்த விவாதம் இன்று நடைபெற்றது.
காலை 11 மணிக்கு அவை கூடியதும், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு அமைக்கப்பட்ட கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதிலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதன் காரணமாக, மாநிலங்களவை நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பிற்பகல் அவை கூடியதும், பட்ஜெட் குறித்த விவாதத்தின்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்து உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து, மாநிலங்களவை கூட்டத்தொடர் மார்ச் 10-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவை துணைத் தலைவரான ஹரிவண்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டார்.