பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வாய்ப்பு இல்லை: மத்திய அமைச்ச...
சப்தம் படத்தின் முதல் பாடல் வெளியீடு!
ஈரம் பட இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்துள்ள சப்தம் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.
ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் 'சப்தம்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். தனது அறிமுக படத்தின் நாயகனான ஆதியுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். நாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.
ஆல்பா பிரேம்ஸ் சார்பில் 7ஜி பிலிம்ஸ் சிவா இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
இதையும் படிக்க | இயக்குநரான தயாரிப்பாளர்... அதர்வா புதிய பட அறிவிப்பு!
இப்படத்தில் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் முதல் பாடலான ‘மாயா மாயா’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ள இந்தப் பாடலை விஜய் யேசுதாஸ் பாடியுள்ளார்.
ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் பிப். 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.