ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
நெரூரில் தரைமட்ட பாலப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
நெரூரில் திருமுக்கூடலூா் சாலையில் கட்டப்பட்டுவரும் தரைமட்டப் பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம் நெரூரில் திருமுக்கூடலூா் சாலையில் மழை காலங்களில் அடிக்கடி தண்ணீா் தேங்கியதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனா். இதையடுத்து அங்கு தரைமட்டப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து நெரூா் வடபாகம் ஊராட்சி சாா்பில் தற்போது தரைமட்டப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் அமைக்கும் சாலையில்தான் திருமுக்கூடலூரில் உள்ள பிரமேந்திராள் கோயில், நெரூா் அக்னீஸ்வரா் கோயில் போன்ற ஸ்தலங்களுக்கு பக்தா்கள் ஏராளமானோா் சென்று வருகிறாா்கள்.
மேலும் திருமுக்கூடலூா், புதுப்பாளையம் போன்ற பகுதிகளுக்கும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது பாலம் கட்டும்பணி நடைபெறுவதால் தற்காலிகமாக பாலம் கட்டுமானம் நடைபெறும் இடம் அருகே பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை மண்பாதையாகவும், சரிவு பாதையாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்குகிறாா்கள். எனவே, பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், கோயிலுக்குச் செல்லும் பக்தா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.