எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை
ரெப்கோ ஹோம் நிகர லாபம் 7% உயா்வு
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 7 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.107 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.99 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.172 கோடியாக இருந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 9 சதவீதம் அதிகரித்து ரூ.188 கோடியாக உள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் கடன் பட்டுவாடா ரூ.759 கோடியிலிருந்து ரூ.761 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.