எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை
ஹூண்டாய் வருவாய் சரிவு
முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் செயல்பாட்டு வருவாய் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.16,648 கோடியாகச் சரிந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த
2024 டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,161 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 19 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,425 கோடியாக இருந்தது.
2023-24-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.16,875 கோடியாக இருந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.16,648 கோடியாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.