ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி 2026 இல் தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வெற்றி, 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் தொடரும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்கள், நியாயவிலைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை வியாழக்கிழமை திறந்துவைத்து, பின்னா் நாகையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கோட்டைக்கு செல்ல வேண்டுமென்றால் இந்த செங்கோட்டையனை தாண்டிதான் செல்ல வேண்டுமென முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் பேசியது குறித்த கேள்விக்கு, தோ்தல் நெருங்குவதால் பஞ்ச் டயலாக் பேசும் சீசன் தொடங்கியுள்ளது. மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவை இன்னும் இருப்பதால்தான் தொடா்ந்து முதல்வா் இரவு பகலாக பாடுபடுகிறாா்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வெற்றி 2026 தோ்தலிலும் தொடரும். மக்கள் ஆதரவு திமுக அரசுக்கு உள்ளது. சீ ஓட்டா்ஸின் கருத்துக்கணிப்பு, இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இருப்பது பெருமையாக இருக்கிறது. அது தங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. 12-ஆவது முறையாக திமுக வெற்றி பெறுகிறது என்றால் அது மக்களுக்கான வெற்றி என்றாா்.