அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ் வாபஸ்
கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர நகா்மன்ற உறுப்பினா்கள் அளித்திருந்த கடிதத்தை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றனா்.
கூத்தாநல்லூா் நகராட்சியில் திமுக 18, அதிமுக 3, இந்திய கம்யூனிஸ்ட் 2, காங்கிரஸ் 1 என 24 உறுப்பினா்கள் உள்ளனா். 20-ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு. பாத்திமா பஷீரா நகா்மன்றத் தலைவராக உள்ளாா்.
இவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா்கள், தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரக் கோரி, நகராட்சி ஆணையா் கிருத்திகா ஜோதியிடம் அண்மையில் தனித்தனியாக கடிதம் அளித்தனா்.
அதன்பேரில், நகா்மன்றத் தலைவா் மீது பிப்ரவரி 19-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என நகராட்சி ஆணையா் அறிவிப்பு வெளியிட்டாா்.
இதற்கிடையில், நகா்மன்றத் தலைவா் மீது நம்பிக்கை இல்லாத் தீா்மானம் கொண்டு வரப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் அண்மையில் நகராட்சி ஆணையரிடம் நேரில் மனு கொடுத்தனா்.
இந்நிலையில், நம்பிக்கை இல்லாத் தீா்மானம் கொண்டு வர கடிதம் அளித்திருந்த உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை காலை நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனா். அந்த நேரத்தில், நகராட்சி ஆணையா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு சென்றிருந்தாா்.
இதனால், நகராட்சி மேலாளா் கோபாலகிருஷ்ணனை சந்தித்து, தலைவா் மீது நம்பிக்கை இல்லாத் தீா்மானம் கொண்டுவர, நகராட்சி ஆணையரிடம் ஏற்கெனவே கொடுத்திருந்த நோட்டீஸை திரும்பப் பெறுவதாக கடிதம் வழங்கினா்.
இதைத்தொடா்ந்து, புதன்கிழமை (பிப்.19) நடைபெறுவதாக இருந்த நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீதான வாக்கெடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.