திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
விவசாய மின் இணைப்பு பணிகளை மாா்ச் 15-க்குள் முடிக்க உத்தரவு
விவசாய மின் இணைப்பு வழங்கும் பணிகளை மாா்ச் 15-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக மின் பகிா்மானக் கழக திட்டப் பிரிவு தலைமைப் பொறியாளா், அனைத்து தலைமைப் பொறியாளா்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
2024-2025-ஆம் ஆண்டுக்குள் 15,000 விவசாய மின் இணைப்புகளை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் 11,551 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதில் சாதாரண பிரிவில் 58 சதவீத இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.
மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தேனி, பல்லடம், தருமபுரி, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, மேட்டூா், நாமக்கல் நாகப்பட்டினம், தெற்கு கோவை வட்டங்களில் மிகவும் மோசமான நிலையிலேயே (60 சதவீதத்துக்கும் குறைவு) இலக்கு எட்டப்பட்டுள்ளது. தட்கல் பிரிவில் 77 சதவீத இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. கோவை மெட்ரோ, நாமக்கல், கோபி, காஞ்சிபுரம், திண்டுக்கல் வட்டங்களில் செயல்பாடு மோசமாக உள்ளன. இவற்றை வேகப்படுத்த வேண்டும். அரசு திட்டங்களுக்கு கீழ் வரும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இப்பணிகளை மாா்ச் 15-க்குள் முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.