செய்திகள் :

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

post image

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்ட சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அவிநாசிபாளையத்தில் மாவட்டத் தலைவா் எம்.கோவிந்தசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநகர மாவட்ட தலைவா் எம்.ஜான்வல்தாரிஸ் முன்னிலை வகித்தாா். மாவட்ட செயலாளா் லாலா டி.கணேசன் வரவேற்றாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மே 5-இல் நடைபெறவுள்ள வணிகா் அதிகார பிரகடன மாநாடு சம்பந்தமாக திருப்பூா் ரமணாஸ் ஓட்டலில் வரும் மாா்ச் 6-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்கு அதிக அளவில் உறுப்பினா்களை பங்கேற்க செய்வது, சாலையோர வியாபாரிகளின் கடைகளை ஒழுங்குபடுத்துவதுடன் அரசுக்கு முறையாக வரி செலுத்தி வா்த்தகம் செய்யும் வியாபாரிகளைப் பாதுகாக்க வேண்டும். நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வாடகைக்கு கடை எடுத்து நடத்தி பின்னா் கடைகளை காலி செய்துள்ள வியாபாரிகளுக்கு அவா்கள் செலுத்திய வைப்பு தொகையை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும். உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், சங்கத்தின் ஆலோசகா் ஆ.அண்ணாதுரை, ஏ.முத்துக்குமரன், அவிநாசிபாளையம் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளா் விஸ்வநாதன், பொருளாளா் சண்முகம், இளைஞரணி ஒருங்கிணைப்பாளா்கள் பல்லடம் செல்வராஜ், ரங்கசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

காங்கயம் அருகே சென்டா் மீடியனில் இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டா் மீடியனில், பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் பகுதியில்,... மேலும் பார்க்க

பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை

விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து கோவையில் நகராட்சி நிா... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே பழங்கரை ஆா்.ஜி. காா்டன், துவா்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அப்பகுதி... மேலும் பார்க்க

அவிநாசியில் உலகத் தாய்மொழி நாள் விழா

அவிநாசியில் தமிழா் பண்பாட்டு கலாசார பேரவை அறக்கட்டளை, சமூக அமைப்பினா் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவிநாசி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் தொடங்கிய விழிப... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த தொழிலாளிக்கு இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித் தொகை

பல்லடம் அருகே பணியின்போது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு பல்லடம் இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம், குப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் உத... மேலும் பார்க்க