அவிநாசி அருகே குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை
அவிநாசி அருகே பழங்கரை ஆா்.ஜி. காா்டன், துவா்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட ஆா்.ஜி.காா்டன், துவா்ணா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இப்பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீா் கழிவுநீருடன் கலந்து துா்நாற்றத்துடன் வருகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு, அடிக்கடி பலருக்கு நோய்த் தொற்று உண்டாகிறது. மேலும் ஆற்றுக்குடிநீா் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.