உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
வெள்ளக்கோவில் உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இலக்கியம், அறிவியல் படைப்பாற்றல், விளையாட்டுப் போட்டி ஆகிய முப்பெரும் விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் ப.நல்லசிவம் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் எஸ்.லோகநாதன், கனரா வங்கி தாசவநாயக்கன்பட்டி முதுநிலை மேலாளா் எம்.எஸ்.கங்காதரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை பி.பிரேமா, கல்வி அறக்கட்டளைத் தலைவா் ரா.வனிதா, புகைப்பட நிபுணா் பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.