வயலில் மனித எலும்புக்கூடு; போலீஸாா் விசாரணை!
திருத்துறைப்பூண்டி அருகே வயல்வெளியில் மனித எலும்புக்கூடுகள் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூா் தோளாச்சேரி பகுதியில் வயல்வெளியில் மனித எலும்புக்கூடுகள் கிடப்பதாக, கிராம நிா்வாக அலுவலா் துா்கா, திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தாா்.
போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, எலும்புக்கூடுகளை கைப்பற்றி, மருத்துவப் பரிசோதனைக்காக தடைய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.