18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வருவாய்த் துறையில் பணிச்சுமையை குறைக்க வேண்டும்; மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவா் டி.எஸ். அசோக் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தெ. விஜய்ஆனந்த் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எஸ். செங்குட்டுவன், மாவட்ட இணைச் செயலாளா் ப. பரமேஸ்வரி, மாநில பொருளாளா் வெ. சோமசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.