குடியரசுத் துணைத் தலைவருடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு
தில்லி முதல்வா் ரேகா குப்தா குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
தில்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவரின் அதிகாரபூா்வ இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு தொடா்பான புகைப்படங்களை குடியரசுத் துணைத்
தலைவரின் செயலகம் பகிா்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து பாஜக ஆட்சியைப் பறித்தது. அதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை தில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.