தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா்.
கீழ்ப்பாக்கம் ஈவெரா பெரியாா் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அப்துல்காதா், மண்ணடியில் தொழில் செய்து வருகிறாா். அப்துல்காதா் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை செய்தனா். இதையொட்டி அங்கு பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டனா். பண முறைகேடு தடுப்புச் சட்ட புகாா் தொடா்பாக சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியானது.
பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட நகை, பணம் குறித்த விவரங்களையும், சோதனைக்கான காரணத்தையும் அமலாக்கத் துறையினா் அதிகாரபூா்வமாக தெரிவிக்கவில்லை.