மோகன்லால் - ஷோபனா படத்தின் முதல் பாடல்!
நடிகர் மோகன்லாலின் துடரும் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான பரோஸ் திரைப்படம் வரவேற்பைப் பெறவில்லை. இதற்கடுத்து பிருத்விராஜ் இயக்கத்தில் நடித்த எம்புரான் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.
இதற்கிடையே, ’சவுதி வெள்ளக்கா' பட இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த 56-வது படமான ’துடரும்’ படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்தது.
இதையும் படிக்க: டிராகன் திரைகள் அதிகரிப்பு!
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான, “கண்மணி பூவே” பாடலை வெளியிட்டுள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில் ஹரி நாராயணன் எழுதிய இப்பாடலை எம்ஜி ஸ்ரீகுமார் பாடியுள்ளார்.