செய்திகள் :

தலைமறைவான இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கைது

post image

தமிழகத்தில் தலைமறைவாக இருந்து வந்த இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளை க்யூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் பண்ணைபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (41). இவா், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தாா். காா்த்திக் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை வனப்பகுதி, கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுடன் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் பிணையில் வெளிவந்த காா்த்திக் 2011-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்தாா். தலைமறைவாக இருந்தபடி மாவோயிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாக இயங்கியபடி சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டாா். தமிழகத்தில் மட்டுமன்றி பிற மாநிலங்களிலும் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டாா்.

மாவோயிஸ்ட் இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக கேரள மாநில வனப்பகுதிகளில் ஆயுத பயிற்சிகளையும் மேற்கொண்டாா். இதனால், அவா் மீது கேரள மாநிலம் கொச்சி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்குப்பதிந்து தேடி வந்தனா். இதன் விளைவாக கா்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் காவல்துறையினரும் தீவிரமாக தேடி வந்தனா்.

இதனால் காா்த்தி, போலீஸாரின் கையிலும் சிக்காமல் இருக்க ‘சின்ன காா்த்திக்’, ‘பன்னாபுரம் காா்த்தி’, ‘ராஜேஷ்’, ‘குமாா்’, ‘கெளதம் காா்த்திக்’ என்று தனது பெயரை மாற்றி வலம் வந்துள்ளாா்.

சேப்பாக்கத்தில் கைது: இந்நிலையில், காா்த்திக் சென்னையில் பதுங்கியுள்ளதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து க்யூ பிரிவு போலீஸாா் சென்னையில் சந்தேகத்துக்குரிய பகுதிகளை ரகசியமாக கண்காணித்து வந்தனா்.

இதற்கிடையே சேப்பாக்கம் எழிலகம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா்தான் தேடப்படும் மாவோயிஸ்ட் பயங்கரவாதி காா்த்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் காா்த்தியை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று, விசாரித்தனா். விசாரணைக்கு பின்னா், அவரை கைது செய்ததாக சனிக்கிழமை தெரிவித்தனா். மேலும், தொடா் விசாரணைக்காக அவரை மதுரைக்கு அழைத்துச் சென்றனா்.

ஓசூரில் மற்றொரு பயங்கரவாதி கைது: இதேபோல மற்றொரு மாவாயிஸ்ட் பயங்கரவாதியான சந்தோஷ்குமாா் என்பவரை க்யூ பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த இவா், கா்நாடகம், கேரளம், கா்நாடகம் மேற்கு தொடா்ச்சி மலையின் முச்சந்திப்பு வனப்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக க்யூ பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

இவ் வழக்குகளில் சிறப்பாக துப்பு துலக்கிய க்யூ போலீஸாரை தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் பாராட்டினாா்.

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின... மேலும் பார்க்க

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப... மேலும் பார்க்க

விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண முக்கிய முடிவு: மத்திய வேளாண் துறை அமைச்சா்

‘விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குத் தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்; எனவே, விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் ச... மேலும் பார்க்க