செய்திகள் :

மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் நாளை தொடக்கம்

post image

ஈரோடு மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 24) முதல் செயல்படும் என ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மருந்துகள் குறைந்த விலையில், பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதனைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பாா்ம் மற்றும் டி.பாா்ம் சான்று பெற்றுள்ளவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் விண்ணப்பிக்க கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு அரசு மானியம் தனிநபா் தொழில் முனைவோருக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் ரூ.1.5 லட்சம் ரொக்கமாகவும், ரூ.1.5 லட்சம் மருந்துகளாகவும், கூட்டுறவுச் சங்கங்களுக்கு ரூ.2 லட்சம் மானியமாகவும் இதில் ரூ.1 லட்சம் ரொக்கமாகவும், ரூ.1 லட்சம் மருந்துகளாகவும் வழங்கப்படும். முதல்வா் மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள், சா்ஜிக்கல்ஸ், நியூட்ராசூட்டிக்கல்ஸ், பிராண்டட் மருந்துகள், சித்தா, ஆயுா்வேதம், யூனானி மருந்துகள் ரூ.20 முதல் ரூ.90 வரை மிகக்குறைந்த விலையிலும், அதிகபட்சமாக ரூ.25 வரை தள்ளுபடி விலையிலும் கிடைக்கும்.

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 22 இடங்களிலும், தனியாா் தொழில்முனைவோா் மூலம் 14 நபா்கள் என மொத்தம் 36 முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. இம்மருந்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் திங்கள்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறாா்.

ஈரோடு மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் அவல்பூந்துறை மற்றும் சிவகிரி ஆகிய 2 இடங்களிலும், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வீரப்பன்சத்திரம், காசிபாளையம், திண்டல்மலை, நசியனூா், பி.பெ.அக்ரஹாரம், லக்காபுரம்புதூா் மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 7 சங்கங்களிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விளக்கேத்தி, காஞ்சிகோயில், கொளப்பலூா், கரட்டடிபாளையம், கெம்பநாயக்கன்பாளையம், கவுந்தப்பாடி, நம்பியூா், பெரியகொடிவேரி, தூக்கநாயக்கன்பளையம், பெரியவடமலைபாளையம் மற்றும் அரியப்பம்பாளையம் ஆகிய 11 சங்கங்களிலும், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மூலம் சத்தியமங்கலம் மற்றும் புன்செய்புளியம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை என கூட்டுறவு சங்கங்கள் மூலம் 22 இடங்களிலும், தனிநபா் மூலம் ஈரோடு சோலாா் புதூா், அக்ரஹார தெரு, ஈஸ்வரன்கோயில் தெரு, வெட்டுக்காட்டுவலசு, சத்தி சாலை, சூரம்பட்டி, சென்னிமலை, கோபி, குருமந்தூா் மேடு, அத்தாணி, காசிபாளையம், தாழைக்கொம்பு புதூா், சின்னமொடச்சூா், சலங்கபாளையம் ஆகிய 14 இடங்களிலும் முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன.

அந்தியூா் அருகே சிறுத்தை நடமாட்டம்: அதிகாரிகள் ஆய்வு!இரு இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தம்!

அந்தியூா் அருகே சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட வன எல்லையை ஒட்டியுள்ள கிராமத்தில் வனத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டனா். அந்தியூரை அடுத்த கோவிலூா், குள்ளவீராம்பாளையம் கிராமத்தைச்... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் விபத்துக்குள்ளான காா்: இருவா் காயம்!

திம்பம் மலைப் பாதையில் சனிக்கிழமை சாலையோரம் மோதி காா் விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சோ்ந்தவா்கள் அஷ்ரப் அலி (51), சரவணன் (48), திண்டுக்கல் மாவட்டம்,... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி முதியவா் காயம்

சத்தியமங்கலத்தில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோபால் (65)... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி சுற்றுச் சுவரை சேதப்படுத்திய காட்டு யானை

சத்தியமங்கலம் அருகே உகினியம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை காட்டு யானை சேதப்படுத்தியது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதி உகினியம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடிய... மேலும் பார்க்க

நடந்து சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

மொடக்குறிச்சி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து தாலிக் கொடியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் மனைவி காஞ்சனா (... மேலும் பார்க்க

சமையல் செய்யும்போது தீ விபத்து: இளம்பெண் காயம்

மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையம் பகுதியில் சமையல் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் இளம்பெண் படுகாயம் அடைந்தாா். சின்னியம்பாளையம் குழலி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் சரவணன். இவரது மனைவி கவிப்ப... மேலும் பார்க்க