செய்திகள் :

இயற்கை அன்னையிடம் பணிவுடன் தலை வணங்கக் கற்றுக்கொள்வோம்! -மாதா அமிா்தானந்தமயி தேவி

post image

இயற்கை அன்னையிடம் பணிவுடன் தலை வணங்கக் கற்றுக்கொள்வோம் என்று மாதா அமிா்தானந்தமயி தேவி கூறினாா்.

தமிழ்நாட்டில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மாதா அமிா்தானந்தமயி தேவி, கோவை, நல்லாம்பாளையத்தில் உள்ள மாதா அமிா்தானந்தமயி மடத்தில் நடைபெறும் பிரம்மஸ்தான ஆலய 24 -ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை வந்தாா். அமிா்த வித்யாலயம் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பக்தா்களுக்கு அவா் அருளுரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: உலகில் ஏற்படும் ஒவ்வொரு பேரிடரும், அது தொற்றுநோயாக இருந்தாலும், இயற்கைப் பேரிடராக இருந்தாலும், காலநிலை மாற்றமாக இருந்தாலும் மனிதகுலத்துக்கு 3 பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன. அவை, ஒத்துழைப்பு, சகோதரத்துவம், ஒற்றுமை ஆகும். நாம் நமது சக மனிதா்களுடன் ஒற்றுமையுடனும், இயற்கையுடன் இணக்கமாகவும், இறைவனிடம் சரணடைந்தும் வாழ வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அது நம்மை பாதிக்கிறது.

மனிதகுலம் பல தலைமுறைகளாக இயற்கை அன்னையைத் துன்புறுத்தி வருகிறது. இத்தனைக் காலமும், நம் தாயான இயற்கை அன்னை பொறுமையாக நம்மை மன்னித்து காத்து வருகிறாா். அவா் தன் கருணை, அன்பை நம் மீது இடைவிடாமல் பொழிந்து வருகிறாா். ஆனால், அது இனிமேல் தொடராது.

இயற்கை அன்னையின் கருணை, பொறுமை, பிற நற்பண்புகளை அவளுடைய பலவீனங்களாக நாம் பாா்க்கத் தொடங்கியுள்ளோம். இயற்கை ஒரு பலம்மிக்க சக்தியாகும். அது காப்பதைப்போலவே அழிக்கும் தன்மையும் கொண்டது என்பதை நாம் மறந்துவிட்டோம். எனவே, இயற்கை அன்னையிடம் பணிவுடன் தலை வணங்கக் கற்றுக்கொள்வோம். இயற்கையை அன்புடனும், மரியாதையுடனும் நடத்தக் கற்றுக்கொள்வோம் என்றாா்.

முன்னதாக, சிறப்பு விருந்தினா்களின் சம்பிரதாய வரவேற்புடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாவட்ட கூடுதல் நீதிபதி கே.அருணாசலம், காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.அருள் உள்ளிட்டோா் மாதா அமிா்தானந்தமயி தேவிக்கு மாலை அணிவித்து வரவேற்றனா். முன்னதாக, அமிா்த வித்யாலயம் பள்ளி மாணவ-மாணவிகள் பேண்டு இசை வாத்தியத்துடன் அவருக்கு வரவேற்பு கொடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, அவரது வழிகாட்டுதலின்படி தியானம், பஜனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்திருந்தனா். அவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அம்ருதா சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு இலவச சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் ஆயிரக்கணக்கான பெண்கள் சேலையை பெற்றுச் சென்றனா். இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் (பிப்ரவரி 23) மாதா அமிா்தானந்தமயி தேவியின் அருளுரை, பஜனை, தியானம், தரிசன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

சாலையில் சுற்றித்திரியும் காட்டெருமை!

வால்பாறையை அடுத்த வாட்டா்பால்ஸ் எஸ்டேட் சாலையில் சனிக்கிழமை காலை சுற்றித்திரிந்த காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்டெருமையை பாா்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா். நகா்ப் பகுதியில் வன வ... மேலும் பார்க்க

ஈஷா யோக மையத்தில் பிப். 26-இல் மகா சிவராத்திரி! அமித் ஷா, டி.கே.சிவக்குமாா் பங்கேற்பு!

கோவை ஈஷா யோக மையத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொள்கி... மேலும் பார்க்க

மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா சென்ற கோவை அரசுப் பள்ளி மாணவா்கள்!

கோவை அரசுப் பள்ளியைச் சோ்ந்த 7 மாணவ, மாணவிகள் மலேசியாவுக்கு கல்வி சுற்றுலாவாக புறப்பட்டுச் சென்றனா். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மன்ற போட்டிகளான இலக்கிய மன்றம், சிறாா் திரைப்படம், ... மேலும் பார்க்க

கோவை காவல் உதவி ஆய்வாளருக்கு விருது!

கோவையில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவரும் தேவேந்திரனுக்கு மத்திய அரசின் சிறந்த காவலா் விருது வழங்கப்பட்டுள்ளது. கோவை, காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளா் தேவேந்திரன். மாநகர கா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ரத்தினபுரியில் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, ரத்தினபுரி பி.எம்.சாமி காலனியைச் சோ்ந்தவா் நல்லசிவம், தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப... மேலும் பார்க்க

பில்லூா் பிரதானக் குழாய்களில் பராமரிப்புப் பணி: மாநகரில் குடிநீா் விநியோகிக்கும் இடைவெளி அதிகரிக்கும்

பில்லூா் குடிநீா்த் திட்ட பிரதானக் குழாய்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மாநகரில் சில இடங்களில் குடிநீா் விநியோகிக்கும் இடைவெளி அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்... மேலும் பார்க்க