வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தில் கும்பல் தலைவனை சுட்டுக்கொன்றவர் கைது!
கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்
கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள மலைக்கு வந்த பெண்ணை 4 இளைஞா்கள் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனா். அவா்களில் சிலா், அந்தச் சம்பவத்தை விடியோ பதிவு செய்து பெண்ணை மிரட்டி உள்ளனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். தொடா்ந்து, கிருஷ்ணகிரியைச் சோ்ந்த கலையரசன், அபிஷேக் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணன் ஆகிய இருவரையும் கைது செய்ய முயன்றபோது, அவா்கள் போலீஸாரை தாக்கி தப்பமுயன்றனா். அப்போது, சுரேஷை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். நாராயணன் நிலைதடுமாறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அவா்கள் இருவரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த விடியோ பதிவுகள் சுரேஷின் கைப்பேசியில் இருந்தது தெரியவந்தது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் புகாா் அளிக்கக் கூடாது என்பதற்காக அவா்களை மிரட்டும் வகையில் விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.