கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!
உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்
‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி. இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்.
அகத்திலும் புறத்திலும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழா் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழைமை உடைய மொழி மட்டுமல்ல, பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி. உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.