எல்லோரா குகைகளை பார்வையிட்ட துணைக் குடியரசுத் தலைவர்
எல்லோரா குகைகளுக்கு சென்று துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று பார்வையிட்டார்.
சத்ரபதி சம்பாஜிநகரில் பல்கலை. மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒருநாள் பயணமாக சத்ரபதி சம்பாஜிநகருக்கு சனிக்கிழமை வருகை தந்தார்.
அப்போது 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான கிருஷ்ணேஸ்வர் கோயிலுக்கு சென்று அவர் வழிபாடு செய்தார்.
தொடர்ந்து யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான எல்லோரா குகைகளில் உள்ள கைலாஷ் கோயிலுக்கு சென்றும் தன்கர் பார்வையிட்டார் என்று இந்திய தொல்லியல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மகா சிவராத்திரி... சிவபக்தர்கள் கொண்டாடும் இடங்கள்!
''துணைக் குடியரசுத் தலைவர் குகையில் உள்ள சிற்பங்களை உன்னிப்பாக கவனித்தார்.
20 முதல் 25 நிமிடங்கள் நீடித்த இந்த பயணத்தின்போது கைலாஷ் குகையில் உள்ள ராமாயணப் பலகையையும் பார்க்கச் சென்றார் என்று அந்த அதிகாரி கூறினார்.
எல்லோரா பற்றிய வழிகாட்டி புத்தகமும் தங்கருக்கு பரிசாக அளிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.