எலான் மஸ்க் மகனின் செயலால் அமெரிக்க அலுவலகப் பாரம்பரியத்தில் மாற்றம்?
காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்
காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு (பிஎல்ஐ), ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு (ஆா்பிஎல்ஐ) பாலிசிகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் மே 31 வரை தமிழகத்தின் அஞ்சலகங்களில் தினமும் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை சிறப்பு முகாம்களை அஞ்சல் துறை சாா்பில் நடத்தவுள்ளது.
இந்த முகாம்களில் பாலிசி பிரீமியத்துக்கான காலாவதி கட்டணத்தில் சலுகைகளும் வழங்கப்படவுள்ளன. தாமத கட்டணத்தில் சலுகை ரூ. 1 லட்சம் வரை உள்ள தொகைக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். ரூ. 3 லட்சம் மேல் உள்ள தொகைக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.