செய்திகள் :

மகனுடன் இணைந்து பேட்டிங் செய்த ராகுல் டிராவிட்!

post image

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் அவரது மகனுடன் இணைந்து பேட்டிங் செய்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் அவரது இளைய மகன் அன்வே உடன் இணைந்து கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். ராகுல் டிராவிட் மற்றும் அவரது இளைய மகன் அன்வே இருவம் விஜயா கிரிக்கெட் கிளப் அணிக்காக யங் லயன்ஸ் கிளப் அணியை எதிர்த்து ஒன்றாக விளையாடினர்.

இதையும் படிக்க: பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த விஜயா கிரிக்கெட் கிளப் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் 6-வது வீரராக களமிறங்கிய ராகுல் டிராவிட் 8 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியின்போது, ராகுல் டிராவிட் அவரது மகன் அன்வேவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்.

அன்வே 60 பந்துகளில் 58 ரன்கள் (8 பவுண்டரிகள்) எடுத்தார். விஜயா கிரிக்கெட் கிளப் அணிக்காக ஸ்வப்னில் அதிகபட்சமாக 50 பந்துகளில் 107 ரன்கள் (12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தார்.

இதையும் படிக்க: 10 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிடும் ஷமி..!

ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் நிலையில், அவரது மூத்த மகன் சமித் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சேஸிங்கில் புதிய வரலாறு..! 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலியா அபாரம்!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலிய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் டாப் 5 தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் தனிநபராக அதிக ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சாதனை படைத்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கி... மேலும் பார்க்க

முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்துள்ளது.அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ்... மேலும் பார்க்க

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபைய... மேலும் பார்க்க

துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!

துபையில் விளையாடும் போட்டிகளில் வெற்றி பெற ஒரு அணி எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அண்மையில் தொடங்கியது. அனைத்த... மேலும் பார்க்க

வரலாறு படைத்த பென் டக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு 352 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டிய... மேலும் பார்க்க