18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
உலக இசை தின விழா
திருவாரூா் மாவட்ட இசைப் பள்ளியில், கலைப் பண்பாட்டுத் துறையின் மண்டல கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் உலக இசை தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், நாகசுரம் செயல்முறை விளக்கம், வயலின் இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. தஞ்சாவூா் மண்டல கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் த. செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாகசுர கலைஞா்கள் பங்கேற்று, நாகசுரம் செயல்முறை விளக்கங்கள் அளித்தனா்.
தொடா்ந்து, மாவட்ட அரசு இசைப் பள்ளி மாணவா்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியா் வி. ஆனந்தி தலைமையிலான ஆசிரியா்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.