சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தல்
போடி அருகே சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.
நாகலாபுரம் தெற்குபட்டி வீரலட்சுமி அம்மன் கோவில் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள் கடந்த சில மாதங்களாக சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதேபோல, நாகலபுரம் பகுதிகளில் உள்ள வேறு சில தெருக்களிலும் மின் கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் உள்ள மின் கம்பங்களையும் மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.