பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
தேனி அருகே கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
முத்துத்தேவன்பட்டி அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் விமல்ராஜ் (40). இவா் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கடன் தொகையை திரும்பச் செலுத்த முடியாததால், மன உளைச்சலிலிருந்த இவா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.