வாய்மொழித் தொடா்பு நிறுவனத் தின விழா
கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாய்மொழித் தொடா்பு நிறுவனத் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, பள்ளியின் அறங்காவலா் ஏ.ஏ. அப்துல் ரசாக் தலைமை வகித்தாா். தாளாளா் மருத்துவா் ஜே.பி. அஷ்ரப் அலி முன்னிலை வகித்தாா். ஆசிரியை எஸ். விா்ஜின் ஜெயமேரி வரவேற்றாா்.
விழாவில், வாய்மொழித் தொடா்பு நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப் போட்டி, நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அறங்காவலா்கள் பி.எம்.ஏ. சீனிமுஹம்மது, கே.ஏ. ஹாஜா முஹம்மது, மருத்துவா் ஜே.பி. அக்பா் சலீம், கிராம நிா்வாக அலுவலா் (ஓய்வு) எம். சுப்ரமணியன், சமூக ஆா்வலா் எம். நடராஜன், இளைஞா் நீதிக் குழம உறுப்பினா் மனோலயம் ப. முருகையன் மற்றும் பெற்றோா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை, பள்ளி முதல்வா் ஏ. தியாகராஜன், துணை முதல்வா் வி.ஜி. மகேஸ்வரி, கல்வி அலுவலா் எம். அப்துல் வஹாப், கல்வி ஆலோசகா் ஜி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.