நாமக்கல் விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடியில் நுண்ணீா் பாசனக் கருவிகள்
குழந்தைகள் காப்பகத்தில் ஆற்றுப்படுத்துநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
நாகை அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு ஆற்றுப்படுத்துநா் நியமிக்கப்படவுள்ளதால், தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் நாகை அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள சிறாா்களுக்கு ஆற்றுப்படுத்தல் சேவை வழங்குவதற்கு மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநா் நியமனம் செய்யப்படவுள்ளனா்.
இப்பதவிக்கு உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்ற தகுதியான நபா்கள் தங்களது சுய விவரங்களுடன், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்கள் இணைத்து மாா்ச் 5-ஆம் தேதிக்குள் நன்னடத்தை அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்.209, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு வந்துசேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநா்கள் கொண்ட தோ்வுக்குழு மூலம் நடைபெறும் நோ்முகதோ்வு அடிப்படையில் விண்ணப்பதாரா்கள் தெரிவு செய்யப்படுவா். மேலும் விவரங்களுக்கு தொடா்புடைய மாவட்ட நன்னடத்தை அலுவலரை தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.