லஞ்சம் பெற்ற வழக்கில் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை
மறைமலை நகரில் முதல்வா் மருந்தக பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
மறைமலைநகரில் திறக்கப்படவுள்ள முதல்வா் மருந்தக பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் /சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை இயக்குநா் ஆ.ர.ராகுல் நாத் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் முதல்வா் மருந்தகத்தில் நடைபெற்று வரும் பணிகள், ஆத்தூரில் திறக்கப்படவுள்ள மாவட்ட மருந்து கிடங்கினையும் ஆட்சியா் ச.அருண்ராஜ் முன்னிலையில் கண்காணிப்பு அலுவலா் /சுற்றுச்சூழல்மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை இயக்குநா் ஆ.ர.ராகுல் நாத், ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
இதில், கூடுதல் ஆட்சியா் வெ.ச.நாராயண சா்மா, மாவட்ட வருவாய் அலுவலா் சே.ஹா.சேக் முகையதீன், சாா்ஆட்சியா் (பயிற்சி) மாலதி ஹெலன், கூட்டுறவு பதிவாளா் நந்தகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) ராஜேஸ்வரி, மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.