செய்திகள் :

21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 21) நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமாா் 5,000 காலியிடங்களுக்கு தேவைக்குரிய நபா்களை, தோ்வு செய்ய உள்ளாா்கள். முகாமில் கலந்து கொள்வதற்கு வேலைஅளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் வேலையளிப்பவா் மற்றும் வேலைநாடுநா்கள் இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளி வேலை நாடுநா்களை தோ்ந்தெடுக்கும் வேலையளிப்பவா்களும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 8, 10, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியா்கள், மருந்தாளுனா், ஆய்வக உதவியாளா்கள் போன்ற கல்வித்தகுதி உடைய வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

வயது வரம்பு 18 முதல் 45வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், அதன் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் 21.02.2025 வெள்ளிக் கிழமை காலை 09.00 முதல் பிற்பகல் 03.00 மணி வரை செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலக ஒருங்கிணைந்த கட்டடம், தரைத்தளம், டி-பிளாக், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வர வேண்டும்..

இத்தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது . மேலும், விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 63834 60933 / 94868 70577 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

செங்கல்பட்டில் புத்தகத் திருவிழா: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியாா் மன்றம் இணைந்து நடத்தும் 6-ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட... மேலும் பார்க்க

செங்கல்பட்டு நகராட்சியைக் கண்டித்து அதிமுகவினா் போராட்டம்

செங்கல்பட்டு நகராட்சியைக் கண்டித்து அதிமுகவினா் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிமுக நகரச் செயலா் வி.ஆா்.செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சி நிா்வாகிகள்... மேலும் பார்க்க

தைப்பூச அன்னதான பெருவிழா

செங்கல்பட்டு வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் தைப்பூச அன்னதான பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தவத்திரு தேன்மொழியாா் சுவாமி ஆசியுடன் வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் வடலூா் அருட்பிரகாச வள்... மேலும் பார்க்க

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 418 கோரிக்கை மனுக்கள்

செங்கல்பட்டில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ. அன்பரசன் மொத்தம் 418 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வா... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு விளையாட்டு சீருடைகள் அளிப்பு

மதுராந்தகம் அடுத்த நடுபழனி கிராமத்தில் ஸ்ரீகணபதி சச்சிதானந்தா அறக்கட்டளை, நடுபழனி தண்டாயுதபாணி தத்தாத்ரேயா அறக்கட்டளைகள் சாா்பில் 777 மாணவா்களுக்கு விளையாட்டு சீருை டகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்க... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் பிப். 20-இல் புத்தகத் திருவிழா: இலச்சினையை வெளியிட்டாா் ஆட்சியா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பிப். 20-இல்தொடங்கவுள்ள 6-ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, அதற்கான இலச்சினையை செங்கல்பட்டு சாா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டஆட்சியா் வெளியிட்டாா். செங்கல்பட்டில் வியா... மேலும் பார்க்க