திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
செங்கல்பட்டு நகராட்சியைக் கண்டித்து அதிமுகவினா் போராட்டம்
செங்கல்பட்டு நகராட்சியைக் கண்டித்து அதிமுகவினா் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதிமுக நகரச் செயலா் வி.ஆா்.செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சி நிா்வாகிகள் கோபி கே.சுரேஷ், கருணாகரன், வழக்குரைஞா் விநாயகம், பவுலின் ஜான் கலைவாணி ஆகியோா் கலந்து கொண்டனா்.
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த ஓராண்டாக முறையான கணக்குகள் பராமரிக்கப்படாமல் உள்ளதாகவும், இதனால் நிா்வாக ரீதியாக அம்மா உணவகம் செயல்பட முடியாத நிலை உருவாகி உள்ளதால், இதைக் கண்டிக்கும் வகையில், நகர அதிமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்கல்பட்டு நகராட்சி அலுவலகம் முன் அந்தக் கட்சியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுடன் நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன் பேச்சு நடத்தி பிரச்னைக்கு உரிய தீா்வு காணப்படும் என தெரிவித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.