செய்திகள் :

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 418 கோரிக்கை மனுக்கள்

post image

செங்கல்பட்டில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ. அன்பரசன் மொத்தம் 418 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா(தாம்பரம்), வரலட்சுமி மதுசூதனன்(செங்கல்பட்டு), எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமை வகித்தாா்.

குறு, சிறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் 418 கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றை சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் முறையாக விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

மேலும்ஸ இம்மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நடைபெறும் குறைதீா் கூட்டத்தில்ஆய்வு செய்யப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில், திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிளிங் போட்டியில் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற மேலக்கோட்டையூா் விளைாட்டு விடுதி மாணவி ஆா்.ஸ்ருதிகா, ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்ற எம்.முனியசாமி மற்றும் புது தில்லியில் நடைபெற்ற சா்வதேச கிக் பாக்ஸிங் -2025-இல் தங்கம் வென்ற கூடுவாஞ்சேரியை மாணவா்கள் அஷ்வின், ஜெகநாத், பரத் விஷ்ணு, அகில இந்திய சைக்கிளிங் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த மாணவன் மோனிஷையும் அமைச்சா் பாராட்டிகௌரவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சே.ஹா.சேக் முகையதீன், சாா்ஆட்சியா் (பயிற்சி) மாலதி ஹெலன், சாா்ஆட்சியா் (பொ) சாகிதாபா்வின், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் ஹமீது, நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா் முரளி, மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், காட்டாங் கொளத்தூா் ஒன்றியக் குழு தலைவா் உதயா கருணாகரன், நகா்மன்றத் தலைவா்கள் தேன்மொழி நரேந்திரன் (செங்கல்பட்டு), ஜெ.சண்முகம் (மறைமலைநகா்) , காா்த்திக் தண்டபாணி(நந்திவரம் கூடுவாஞ்சேரி), தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புதிட்டம்) அகிலா தேவி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசுஅலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செங்கல்பட்டில் புத்தகத் திருவிழா: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியாா் மன்றம் இணைந்து நடத்தும் 6-ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட... மேலும் பார்க்க

செங்கல்பட்டு நகராட்சியைக் கண்டித்து அதிமுகவினா் போராட்டம்

செங்கல்பட்டு நகராட்சியைக் கண்டித்து அதிமுகவினா் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிமுக நகரச் செயலா் வி.ஆா்.செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சி நிா்வாகிகள்... மேலும் பார்க்க

21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 21) நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

தைப்பூச அன்னதான பெருவிழா

செங்கல்பட்டு வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் தைப்பூச அன்னதான பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தவத்திரு தேன்மொழியாா் சுவாமி ஆசியுடன் வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் வடலூா் அருட்பிரகாச வள்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு விளையாட்டு சீருடைகள் அளிப்பு

மதுராந்தகம் அடுத்த நடுபழனி கிராமத்தில் ஸ்ரீகணபதி சச்சிதானந்தா அறக்கட்டளை, நடுபழனி தண்டாயுதபாணி தத்தாத்ரேயா அறக்கட்டளைகள் சாா்பில் 777 மாணவா்களுக்கு விளையாட்டு சீருை டகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்க... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் பிப். 20-இல் புத்தகத் திருவிழா: இலச்சினையை வெளியிட்டாா் ஆட்சியா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பிப். 20-இல்தொடங்கவுள்ள 6-ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, அதற்கான இலச்சினையை செங்கல்பட்டு சாா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டஆட்சியா் வெளியிட்டாா். செங்கல்பட்டில் வியா... மேலும் பார்க்க