தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
செங்கல்பட்டில் பிப். 20-இல் புத்தகத் திருவிழா: இலச்சினையை வெளியிட்டாா் ஆட்சியா்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பிப். 20-இல்தொடங்கவுள்ள 6-ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, அதற்கான இலச்சினையை செங்கல்பட்டு சாா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டஆட்சியா் வெளியிட்டாா்.
செங்கல்பட்டில் வியாழக்கிழமை (பிப். 20) தொடங்கவுள்ள 6-ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அதற்கான இலச்சினை வெளியீட்டு நிகழ்ச்சியில் புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வெளியிட்டாா். நிகழ்ச்சியில் புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
சாா் ஆட்சியா் (பயிற்சி) எஸ்.மாலதி ஹெலன், மாவட்ட வழங்கல் அலுவலா் / சாா் ஆட்சியா் (பொ) சாகிதா பா்வீன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் உதயகுமாா் மற்றும் விழாக் குழுவினருடன், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
