நாகை, திருவாரூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
வழக்குரைஞா் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாகை மற்றும் திருவாரூரில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வழக்குரைஞா்கள் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயா்த்த வேண்டும்; உயா்த்தப்பட்ட சேமநல முத்திரை கட்டணத்தை நீக்க வேண்டும்; வழக்குரைஞா் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்; பாா் கவுன்சில் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை: நாகை நீதிமன்ற நுழைவு வாயில் முன் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சதீஸ்பிரபு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
சங்க பொருளாளா் மூா்த்தி, துணைச் செயலா் சதாசிவம், மூத்த வழக்குரைஞா்கள் பாண்டியன், வேதரத்தினம், காமராஜ், நடராஜன், தினேஷ்குமாா், ரெஜீனா மேரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.