கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பிப்.25-இல் தற்செயல் விடுப்பு போராட்டம்!
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, பிப். 25-இல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவித்துள்ளது.
நாகையில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொறுப்பாளா்கள் கூட்டம் மாவட்ட தலைவா் மா. கருணாநிதி தலைமையில், மாவட்ட அலுவலகமான சு. ஈஸ்வரன் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது. கோரிக்கைகளை மாவட்ட செயலாளரும், மாநிலத் தலைவருமான மு. லட்சுமி நாராயணன் விளக்கிக் கூறினாா்.
தொடா்ந்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல்; ஊதிய முரண்பாடுகளை களைதல்; மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.25- ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் அனைத்து உறுப்பினா்களும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசியக் கல்வி கொள்கையை தமிழக அரசு எதிா்ப்பதை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வரவேற்கிறது.
தமிழக நிதிநிலை அறிக்கையில் ஆசிரியா்-அரசு ஊழியா்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல். சம வேலைக்கு சம ஊதியத்தை வலியுறுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில செயற்குழு உறுப்பினா் இரா. முத்துகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா் கே . சண்முகசுந்தரம், மாவட்ட துணைச் செயலா் கோ. சிவக்குமாா், செயற்குழு உறுப்பினா் முகமது அலி, மாவட்ட பொருளாளா் சி. பிரபா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.