கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்தால்.. இனி கட்டணம்! புதிய நடைமுறை!
ராசிபுரத்தில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம்
முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் நடைபெற்றது.
ராசிபுரம் பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை முன் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் வழக்குரைஞா் இ.ஆா். சந்திரசேகரன் தலைமை வகித்தாா். ராசிபுரம் நகர அதிமுக செயலாளா் எம்.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசியதாவது:
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கத் தவறினால் மாவட்ட காவல் துறையைக் கண்டித்து மாவட்ட அளவிலான ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.
அதன்பிறகு ராசிபுரம் நகரில் உள்ள கடைகள், வீடுகளுக்குச் சென்று முந்தைய அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை அதிமுகவினா் விநியோகித்தனா்.
அதிமுக மகளிரணி இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெ. சரோஜா, மாவட்ட அவைத் தலைவா் எஸ்.பி. கந்தசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.
படம் உள்ளது- 21தங்கம்
படவிளக்கம்-
ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி.