தொழுநோய் ஒழிப்புத் திட்டப் பணி: சுகாதார அலுவலா் ஆய்வு!
வேளாங்கண்ணி பகுதியில் தொழுநோய் ஒழிப்புத் திட்டப் பணிகளை மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், கீழையூா் வட்டாரத்தில் 44 குழுக்கள், நாகை வட்டாரத்தில் 43 குழுக்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று யாருக்கேனும் தொழுநோய் அறிகுறிகள் உள்ளனவா என கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இப்பணி பிப்.13 ஆம் தேதி தொடங்கி பிப். 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறு.
இந்நிலையில், வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் நடைபெறும் களப்பணியை, மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமாா் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது பொதுமக்களிடம் தொழுநோய் அறிகுறிகள் மற்றும் அதிலிருந்து தற்காத்து கொள்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
வேளாங்கண்ணி சுகாதார ஆய்வாளா்சு. மோகன் மற்றும் குழுவினா் உடனிருந்தனா்.