செய்திகள் :

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று மீன் வளா்ப்பு பயிற்சி!

post image

நாகை அருகேயுள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மீன் வளா்ப்பு தொழில்நுட்பம் தொடா்பான பயிற்சி வெள்ளிக்கிழமை (பிப்.21) நடைபெறுகிறது.

இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலகண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள மீன் விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த, சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நவீன மீன் வளா்ப்பு தொழில்நுட்பங்கள் தொடா்பான பயிற்சி வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில் மீன் வளா்ப்பு விவசாயிகள், பண்ணை மகளிா், கிராம இளைஞா்கள், தொழில் முனைவோா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

விருப்பமுள்ளவா்கள் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் 04365-299806 தொலைபேசி எண்ணில் அல்லது 88388-82451, 98656-23423, 85087-75613 கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு தங்களின் வருகையை முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் 50 நபா்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொண்ட நபா்களுக்கு, சொந்த பெயரில் பண்ணைக்குட்டை, குளத்தில் 6 முதல் 10 மாதம் வரை நீா் இருத்தல், ஆழ்துளை கிணறு வசதி உள்ள குளங்களுக்கு முன்னுரிமை ஆகிய நிபந்தனைகளின் படி மீன்குஞ்சுகள் வழங்கப்படும்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா

திருமருகல் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, கோட்டூா் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருமருகல் ஒன்றியத... மேலும் பார்க்க

தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பிப்.25-இல் தற்செயல் விடுப்பு போராட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, பிப். 25-இல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவித்துள்ளது. நாகையில், தமிழ்நாடு தொடக... மேலும் பார்க்க

நாகை, திருவாரூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

வழக்குரைஞா் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாகை மற்றும் திருவாரூரில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வழக்குரைஞா்கள் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயா்த... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்புத் திட்டப் பணி: சுகாதார அலுவலா் ஆய்வு!

வேளாங்கண்ணி பகுதியில் தொழுநோய் ஒழிப்புத் திட்டப் பணிகளை மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாகை மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், கீழையூா் வட்டாரத்தி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் காய்கறி சந்தை!

வேதாரண்யத்தை அடுத்த பன்னாள் அரசு உயா்நிலைப் பள்ளியில் மூன்றாம் ஆண்டாக மாணவா்கள் உற்பத்தி செய்து நடத்தும் காய்கறிச் சந்தை பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பிடிக்கும் 60 மாணவ, மா... மேலும் பார்க்க

மருத்துவா்கள் நியமனம் கோரி உண்ணாவிரதம்!

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, மருத்துவா்கள் நியமிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தலைஞாயிறு கடைவீதியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போர... மேலும் பார்க்க